ரஷிய நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் 4 வீரர்கள் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு ரஷியாவின் புஸ்கோவ் பிராந்தியத்தில் வழக்கமான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தபோது தரையுடனான தகவல் தொடர்பை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் அதில் சென்ற நான்கு வீரர்களும் பலியானதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான பராமரிப்பு காரணமாக ரஷிய நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர்கள் அவ்வப்போது விபத்தை சந்திப்பதும், வீரர்கள் பலியாவதும் அதிகரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.