இந்தியாவை சேர்ந்த கூகிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவிலேயே மிக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். தற்போது வெளியாகியுள்ள தகவல் படி சுந்தர் பிச்சைக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கூகுளில் அவரின் பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு, சராசரி அமெரிக்கரின் சொத்து மதிப்பை விட 14,440 மடங்கு அதிகமாகும்.