தென் கொரியாவில் அமெரிக்கா தனது அதி நவீன ஏவுகணைகளை நிறுத்தினால், அது அந்தப் பிராந்தியத்தில் ஆயுதப் போட்டியை உருவாக்கும் என ரஷியா எச்சரித்துள்ளது.
வட கொரியா ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை மேற்கொண்டதற்கு பதிலடியாக, அணுகுண்டு வீச்சுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடிய “டெர்மினல் ஹை அல்டிடியூட் ஏரியா டிஃபன்ஸ் சிஸ்டம்’ (தாட்) ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தென் கொரிய அதிகாரிகள் கடந்த வாரம் கூறினர்.
இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “”கடினமான இந்தச் சூழலில் அமெரிக்காவின் அதி நவீன ஏவுகணைகள் தென் கொரியாவுக்கு வழங்கப்பட்டால், அது கொரியத் தீபகற்பத்தில் ஆயுதப் போட்டியை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கை விடுத்தது.
3