செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் கிராமி விருது பெறும் முதல் பெண் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் கிராமி விருது பெறும் முதல் பெண்

பிரபல பாப் இசை பாடகி டெய்லர் கிராமி விருது பெறும் முதல் பெண் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் கிராமி விருது பெறும் முதல் பெண்

1 minutes read

ல இசையில் சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘கிராம போனை’ நினைவு கூறும் வகையில் இந்த விருதுக்கு, ‘கிராமி விருது’ என்று பெயிரிடப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில், இசைக் கலைஞர்கள் பங்கேற்று, தங்களது திறமையை
வெளிப்படுத்தினர். ‘அப்டவுன் பங்’ சாதனைஇதில், பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின், 26, இசை ஆல்பம், இந்த ஆண்டுக்கான சிறந்த ஆல்பமாக தேர்வு செய்யப்பட்டது. அவர், இந்த பிரிவில் விருது பெறும் முதல் பெண் என்ற பெருமையை பெறுகிறார்.ராப் இசை பிரிவில், கென்ரிக் லாமருக்கு விருது கிடைத்துஉள்ளது.
இந்த ஆண்டுக்கான பாடல் பிரிவில், பிரிட்டனைச் சேர்ந்த, பாப் பாடகரான ஈட் ஷெரன் விருதை தட்டிச் சென்றுள்ளார். மார்க் ரோன்சன் மற்றும் புருனோ மார்ஸ் இணைந்து உருவாக்கிய, ‘அப்டவுன் பங்’ என்ற இசை தொகுப்பு, இந்த ஆண்டு சாதனை பிரிவில் தேர்வாகி உள்ளது.
ஆங்கில இசையை தவிர, உலக பிரிவில் மற்ற நாட்டு இசை கலைஞர்களின் இசை தொகுப்புகளும் போட்டியிட்டன.

இதில், இந்தியாவைச் சேர்ந்த, பிரபல சிதார் இசை கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் மகள் அனோஷ்கா சங்கர், 34, உருவாக்கிய, ‘ஹோம்’ என்ற, பாரம்பரிய சிதார் இசை ஆல்பமும், போட்டியில் இருந்தது. ஆனால், அவருக்கு விருது கிடைக்கவில்லை.
பிரிட்டனில் வசிக்கும் மற்றொரு இந்தியரான, ஆசீப் காபாடியாவின், ‘ஆமி’ என்ற ஆவணப்படத்திற்கு, சிறந்த திரைப்பட இசைப்பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.