2016ம் ஆண்டிற்கான குளோபல் ஆசிரியர் விருதுக்கு 4 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 50 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் வெளியிட்டுள்ளார். இதில் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ராபின் சவ்ராசியா உட்பட இருவர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இரண்டு இந்தியர்கள் 50 பேர் பட்டியலில் உள்ளனர்.சவ்ராசியா மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் கடத்தி வரப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் பெண் குழந்தைகள் என 12 முதல் 20 வயது வரையிலான பெண்களுக்கு இலவச, சேவை மனப்பான்மையோடு கல்வி கற்றுத் தருகிறார். உலகம் முழுதிலும் உள்ள 148 நாடுகளைச் சேர்ந்த 8000 பேர் குளோபல் ஆசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இவர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் டாப் 10 இடத்தில் ராபின் இடம்பெற்றுள்ளார். இந்த விருதுகள் மார்ச் 13ம் தேதி துபாயில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
8