செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இரண்டு சமுதாயத்தினரிடையை தெற்கு சூடனில் வன்முறை | ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலிஇரண்டு சமுதாயத்தினரிடையை தெற்கு சூடனில் வன்முறை | ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

இரண்டு சமுதாயத்தினரிடையை தெற்கு சூடனில் வன்முறை | ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலிஇரண்டு சமுதாயத்தினரிடையை தெற்கு சூடனில் வன்முறை | ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலி

0 minutes read

தெற்கு சூடானில் ஐ.நா பாதுகாப்புக் குழு நடத்திய தாக்குதலில் 7 கொல்லப்பட்டுள்ளதாகவும், 40 பேர் படுகாயமடைந்ததாகவும், பொதுச் செயலாளர் பான்-கி-மூன் தெரிவித்துள்ளார்.

தெற்கு சூடானின் மலக்கல் நகரின் வடகிழக்கு பகுதியில் தின்கா மற்றும் ஷில்லுக் என்ற இரண்டு சமுதாயத்தினரிடையை வன்முறை வெடித்தது. நேற்று இரவு தொடங்கி இந்த கலவரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வருத்தத்தையும் வெளிப்படுத்தினார். வன்முறையை தூண்டிவிடும் அனைத்து அரசியல் கட்சியினரையும் அவர் எச்சரித்தார்.

தெற்கு சூடானில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை சம்பங்களுக்கு இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கோர் வீடுகளை இழந்து வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர்.

சுமார் 2 லட்சம் பேர் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.