செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நவீன ரக ஸ்மார்ட் ஷூ சாதனை சாம்சங் நிறுவனம்நவீன ரக ஸ்மார்ட் ஷூ சாதனை சாம்சங் நிறுவனம்

நவீன ரக ஸ்மார்ட் ஷூ சாதனை சாம்சங் நிறுவனம்நவீன ரக ஸ்மார்ட் ஷூ சாதனை சாம்சங் நிறுவனம்

1 minutes read

பாதங்கள் நோகாமலும், காயப்படாமலும், அசுத்தம் ஆகாமலும் நம்மை ஊர் ஊராக அழைத்துச் செல்லும் காலணிகளை பெரிய பொருட்டாக பலர் மதிப்பதில்லை. அந்த நிலையை மாற்றி, நம்மை தகுதியான மனிதர்களாக தரம் உயர்த்தும் நவீன ரக ஸ்மார்ட் ஷூக்களை நவீன மின்னணு உபகரணங்கள் உற்பத்தியில் சாதனை படைத்துவரும் சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தவுள்ளது.

 
சாம்சங் நிறுவனத்தின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி குழுமமான ‘சால்ட்டட் வென்ச்சர்’ வடிவமைத்துள்ள இந்த நவீன ரக ஷூக்கள் ஓட்டப் பயிற்சி, உடல் பயிற்சி மற்றும் ‘கோல்ஃப்’ விளையாட்டின்போது உங்களது உடல் அசைவுகளை வெகு துல்லியமாக கண்காணித்து, நீங்கள் மிகச்சிறப்பாக செயல்படுவதற்கான அறிவுரைகளை தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆண்டிராய்ட் செயலி வழியாக உங்களது கைபேசிக்கு தகவல் அளிக்கும்.
 
அதற்கு தக்கபடி உங்களது இருப்பையும், அசைவுகளையும் மாற்றிக் கொண்டால் உங்களது பயிற்சியின் அடுத்தபடிக்கு செல்லலாம். உதாரணமாக, உடற்பயிற்சியின்போது பளுதூக்கும் வீரர்கள் சமநிலையான (பேலன்ஸ்) நிலையில் நின்றிருக்கிறார்களா? அல்லது, உடலின் அழுத்தவிசை ஒருபக்கமாக மட்டும் இருக்கிறதா? என்பதை ‘லாஃபிட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஷூக்கள் நொடிப் பொழுதில் சுட்டிக்காட்டும். அதற்கேற்ப, தங்களது இருப்பை அவர்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
 
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்செலோனா நகரில் வரும் 22 முதல் 25-ம் தேதிவரை நடைபெறவுள்ள ‘மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ்’ கண்காட்சியில் இடம்பெறவுள்ள இந்த சாம்சங் ‘லாஃபிட்’ ஷூக்கள் இரண்டு ரகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
 
ஓட்டப்பயிற்சி மற்றும் உடல்பயிற்சியாளர்களுக்கான ஷூ 199 அமெரிக்க டாலர் விலையிலும், ‘கோல்ப்’ ஆட்டக்காரர்களுக்கான ஷூ 259 அமெரிக்க டாலர் விலையிலும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.