செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் முஹம்மது நபியின் சமாதி அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 90-க்கும் அதிகமானவர்கள் பலிஐ.எஸ். தீவிரவாதிகள் முஹம்மது நபியின் சமாதி அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 90-க்கும் அதிகமானவர்கள் பலி

ஐ.எஸ். தீவிரவாதிகள் முஹம்மது நபியின் சமாதி அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 90-க்கும் அதிகமானவர்கள் பலிஐ.எஸ். தீவிரவாதிகள் முஹம்மது நபியின் சமாதி அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 90-க்கும் அதிகமானவர்கள் பலி

1 minutes read

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் மற்றும் வர்த்தக பெருநகரமான ஹோம்ஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய ஆவேச தாக்குதலில் 150 பேர் பலியாகினர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்த அலெப்போ நகரை சமீபத்தில் கைப்பற்றிய ராணுவப் படைகள் அடுத்தகட்டமாக வடக்கு நோக்கி முன்னேறிச் செல்லும் வேளையில் நேற்று நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல்கள் உள்ளூர் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக அல் சாஹ்ரா மாவட்டத்தின் மையப்பகுதியான ஹோம்ஸ் நகரின் இரு இடங்களில் நடைபெற்ற கார் குண்டு தாந்த தாக்குதலில் 60-க்கும் அதிகமானோர் பலியாகினர். அடுத்ததாக தலைநகர் டமாஸ்கஸ் அருகே கார் குண்டு மற்றும் குண்டுவீச்சு தாக்குதல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தினர்.

முஹம்மது நபியின் பேத்தியான சையிதா ஜைனப் என்பவரின் சமாதி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 90-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

மேற்கண்ட தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.