உலக அளவில் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் பட்டியலில், ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த வியன்னா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத் நகரம் முதலிடமும், உலகளவில் 139வது இடத்தையும் பிடித்துள்ளது.
உலகில் வாழ்வதற்கு சிறந்த இடங்கள் பற்றி மெர்ஜர் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், ஆஸ்திரியா தலைநகர் வியன்னா முதலிடம் பிடித்துள்ளது. 2வது மற்றும் 3வது இடங்கள் முறையே சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜூரிச் நகரமும், நியூசிலாந்தை சேர்ந்த ஆக்லாந்து நகரமும் இடம் பிடித்துள்ளன. டாப்-10 பட்டியலில் அடுத்த 4 முதல் 10 இடங்கள் முறையே, ஆக்லாந்து(நியூசிலாந்து), முனீச்(ஜெர்மனி), வான்கோவர்(கனடா), டசல்டர்ப்(ஜெர்மனி), பிரான்க்பர்ட்(ஜெர்மனி), ஜெனிவா(சுவிட்சர்லாந்து), ஹோப்பன்ஹகன்(டென்மார்க்), சிட்னி(ஆஸ்திரேலியா), ஆம்ஸ்டர்டாம்(நெதர்லாந்து) ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இப்பட்டியலில் சிங்கப்பூர் 26வது இடத்தையும், பாரீஸ் 37வது இடத்தையும், லண்டன் 39வது இடத்தையும், நியூயார்க் 44வது இடத்தையும் பெற்றுள்ளன. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இப்பட்டியலில் 51வது இடமே கிடைத்துள்ளது. டாப்-100ல் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பெறவில்லை
இந்தியாவில் ஐதராபாத் நகரம் முதலிடமும், உலக அளவில் 139வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய நகரங்களில் புனே நகரம் 144வது இடத்தையும், பெங்களூரு 145வது இடத்தையும், சென்னை 150வது இடத்தையும், மும்பை 152வது இடத்தையும், கொல்கத்தா 160வது இடத்தையும், புதுடில்லி 161வது இடத்தையும் பிடித்துள்ளன.