செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தடை | அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தடை | அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தடை | அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க தடை | அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

1 minutes read

பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட 8 எஃப்-16 ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்காக 70 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,550 கோடி) மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப் போவதாகவும் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் எம்.பி. ராண்ட் பால் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார்.

அதைத் தொடர்ந்து அந்நாட்டின் கீழ் சபையில் அந்தத் தீர்மானத்தை எம்.பி. டானா ரோராபேச்சர் கொண்டுவந்தார்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தி 3,000 பேரைக் கொன்ற பின்லேடன் ஒரு கொடுமையான பயங்கரவாதி. அத்தகைய குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும், கண்டுபிடிப்பதற்கும் ஷகீல் அஃப்ரிடி என்ற பாகிஸ்தானிய மருத்துவர் உதவினார்.

ஆனால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்துள்ளது பாகிஸ்தான் அரசு. நம்மிடமிருந்து (அமெரிக்கா) பெறப்படும் ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானில் உள்ள மக்கள் மீதும், குறிப்பாக பலூசிஸ்தான் மாகாண மக்கள் மீதும் அந்நாட்டு அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது. அதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்கக் கூடாது என்ற தீர்மானத்தைக் கொண்டுவர நான் முடிவு செய்தேன்.

-டானா ரோராபேச்சர்

பாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 50,000 பேர் உயிரிழந்து விட்டனர். பயங்கரவாதிகளால் அந்நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உள்ளது. அதன் காரணமாகவே, அந்நாட்டுக்கு போர் விமானங்களை அளிக்க அமெரிக்க அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிராக நவீன தொழில்நுட்பரீதியாக பாகிஸ்தான் போரிட முடியும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.