சமீபத்தில் வெளிவந்த தாரை தப்பட்டை, இளையராஜாவின் 1000-வது படம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இளையராஜா 1000 என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
நாளை சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான விளம்பரங்களும் இதுதொடர்புடைய இளையராஜாவின் பேட்டிகளும் விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள். இதுபற்றி கலைப்புலி தாணு ஒரு பேட்டியில் கூறும்போது, இளையராஜாவைக் கெளரவப்படுத்த இந்த விழாவில் கலந்துகொள்ள திரையுலகினர் ஆர்வமாக உள்ளார்கள். இளையராஜாவைப் பெருமைப்படுத்தும் இந்த நிகழ்ச்சியை முன்நின்று நடத்தும் விஜய் டிவிக்கு வாழ்த்துகள் என்று கூறினார். இதனையடுத்து, நாளை நடைபெறும் விழாவில், ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது.