செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 60 சதவீத வாக்குப் பதிவு | ஈரான் நாடாளுமன்றத் தேர்தல்60 சதவீத வாக்குப் பதிவு | ஈரான் நாடாளுமன்றத் தேர்தல்

60 சதவீத வாக்குப் பதிவு | ஈரான் நாடாளுமன்றத் தேர்தல்60 சதவீத வாக்குப் பதிவு | ஈரான் நாடாளுமன்றத் தேர்தல்

1 minutes read

ஈரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 60% வாக்கு பதிவானது.

அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஹுசேன் அலி அமீரி இது தொடர்பாக சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

290 எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்றத்துக்கும், 88 உறுப்பினர்கள் கொண்ட மதகுருக்கள் அவைக்கும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள தகுதி பெற்ற 5.5 கோடி வாக்காளர்களில், 3.3 கோடி பேர் வாக்குப் பதிவு செய்தனர். வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. எந்த வேட்பாளரும் 25% வாக்குப் பெறாத தொகுதிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறும்.

தலைநகரைத் தவிர்த்து பிற இடங்களில் தேர்தல் முடிவுகள் முதலில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. டெஹ்ரானில் 30 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கை சற்றுத் தாமதமாகலாம்.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாக 3 நாள்களாகும் என்றார் அவர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் 4 ஆண்டுகள். மதகுருக்கள் அடங்கிய குழுவின் பதவிக் காலம் 8 ஆண்டுகள். அதிபரைவிட அதிகாரம் படைத்த தலைமை மதகுருவான அயதுல்லா அலி கமேனியின் செயல்பாடுகளை 88 உறுப்பினர் அடங்கிய மதகுரு அவை மேற்பார்வையிடும்.

தலைமை மதகுரு காலமானால், புதிய தலைமை மதகுருவை இந்த அவைதான் தேர்ந்தெடுக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.