அமெரிக்காவின், வெர்ஜினியா மாகாணத்தில், பதவி ஏற்ற முதல் நாளிலேயே பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷ்லே கெயிண்டான் வயது 28. வாஷிங்டன்னில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது லேக்ரிட்ஜ் நகர். இங்கு உள்ள ஒரு வீட்டில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் போலீஸ் அதிகாரி உள்பட 3 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆஷ்லே கெயிண்டான் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து, தாக்குதலுக்கான காரணம் குறித்தும், விசாரித்து வருகின்றனர்.