கமலின் மூத்த மகள் தமிழ் சினிமாவிற்கு பாடகியாகத்தான் அறிமுகமானார். பின்னர், கமல் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர், இந்தியில் நடிகையாக அறிமுமாகி, தமிழிலும் நடிக்கத் தொடங்கினார்.
பாடுவதற்கு, இசையமைப்பதற்கு வந்த வாய்ப்பைவிட, நடிப்பதற்கே அதிக வாய்ப்புகள் வந்ததால் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன். அவ்வப்போது இவர் நடிக்கும் படங்களிலும், நண்பர்களுக்காகவும் ஒரு சில பாடல்களை பாடி வந்தார்.
தற்போது ஸ்ருதிஹாசன் ‘எஸ்3’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘புலி’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடல் பாடியிருந்தார். அதுபோல், இந்த படத்திலும் அவரது குரலில் ஒரு பாடல் இடம்பெறுமா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘எஸ்3’ படத்தில் நான் எந்த பாடலும் பாடவில்லை. நான் நடிக்கும் படங்களில் எல்லாம் நான் பாடவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அதைப்பற்றி நான் யோசிக்கவும் இல்லை என்று கூறினார்.
மேலும், அவர் கூறும்போது, இந்த படம் போலீஸ் கதை என்பதால், இதில் நான் போலீஸ் கதாபாத்திரத்தில் எல்லாம் நடிக்கவில்லை. இருந்தாலும், ரசிகர்களை திருப்திபடுத்தும்விதமாக இந்த படத்தில் எனது கதாபாத்திரம் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.