செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அநுர ஆட்சியில் ராஜபக்சக்களை விஞ்சும் ஒடுக்குமுறை | எழுத்தாளர் தீபச்செல்வன் சாடல்

அநுர ஆட்சியில் ராஜபக்சக்களை விஞ்சும் ஒடுக்குமுறை | எழுத்தாளர் தீபச்செல்வன் சாடல்

1 minutes read

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீதான அடக்குமுறைகள் குறையவில்லை என எழுத்தாளர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சவின் காலத்தில் எனது 60 நூல்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், தற்போதைய அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் சுமார் 230 க்கும் மேற்பட்ட நூல்கள் சுங்கப் பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளில் இருந்த போது ஊடக சுதந்திரத்திற்காகப் பேசியவர்களே இன்று அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழ் மக்களின் குரல்வளையை நெரிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக சிங்கள எழுத்தாளர்களும் கவிஞர்களும் எமக்கு ஆதரவளிக்கும் நிலையில், ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது ஏமாற்றமளிக்கின்றது.

தமிழர்களின் வலிகளையும் போராட்ட வரலாற்றையும் தென்னிலங்கை மக்களிடம் கொண்டு செல்வது ஆபத்தானது எனத் தெரிந்தும், அறத்தின் வழி நின்று தொடர்ந்து செயல்படப் போகின்றேன்.

“எழுத்தே எனது ஆயுதம்”, இத்தடையானது எனது படைப்புகளைச் சிங்கள மக்கள் தேடி வாசிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க……

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.