செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் போலந்தில் துறவிமட வளாகத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் பலி; நால்வர் காயம்; உக்ரேனிய பிரஜை கைது

போலந்தில் துறவிமட வளாகத்தில் கத்திக்குத்துத் தாக்குதல்: ஒருவர் பலி; நால்வர் காயம்; உக்ரேனிய பிரஜை கைது

0 minutes read

போலந்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெனடிக்டைன் துறவிமட வளாகத்திற்குள் நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட கொடூர கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் 31 வயதான உக்ரேனிய பிரஜை ஒருவரை பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகக் கைது செய்துள்ளதாக பொலிஸார் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலின் பின்னணி அல்லது அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார்முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.