செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு

இங்கிலாந்தில் வனவிலங்கு பூங்காவில் புலி தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு

1 minutes read

இங்கிலாந்தில் உள்ள யோக்‌ஷயர் வனவிலங்கு பூங்காவில் ( Yorkshire Wildlife Park) புலி தாக்கியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டொன்காஸ்டர் பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள குறித்த பூங்காவில் சனிக்கிழமை பிற்பகல் இந்த கோரச் சம்பவம் பதிவாகியுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 1:35 மணியளவில் பொலிஸாருக்கு அவசர அழைப்பு கிடைப்பதற்கு சற்று முன்னர், அந்த நபர், புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைவதை நேரில் கண்டவர்கள் அவதானித்துள்ளனர். அவர் உள்ளே சென்ற உடனேயே புலி அவரைத் தாக்கியதாகவும், அதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெற்கு யோக்‌ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது குறித்த விலங்கிற்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், அது தொடர்ந்தும் அப்பகுதியிலேயே அடைக்கப்பட்டுள்ளதாகவும், பூங்கா உடனடியாக மூடப்பட்டு, வார இறுதி முழுவதும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள டொன்காஸ்டர் நோர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இங்கிலாந்தின் வெளிவிவகார செயலாளருமான எட் மிலிபான்ட், உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து செயற்பட்ட அவசர சேவைகள் பிரிவினருக்கும் பூங்காவின் ஊழியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக இணையதளங்களில் பகிரப்படும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற போது பூங்கா நிர்வாகத்தினர் பார்வையாளர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியதாகவும், வானில் அவசர மருத்துவ ஹெலிகொப்டர் வட்டமிட்டதுடன் துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தங்கள் கேட்டதாகவும் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதியைச் சுற்றி கறுப்பு நிற தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டதாகவும் அவர்கள் விவரித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யோக்‌ஷயர் வனவிலங்கு பூங்காவில் புலிகளுக்கான பிரத்தியேக பகுதி 2011ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. உலகில் தற்போது சுமார் 500 மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கருதப்படும் மிக அரிதான அமுர் இன புலிகள் இந்த இரண்டு ஏக்கர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.