செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் 5,258 பேர் உயிரிழப்பு! 2016க்குப் பின் பதிவான அதிகபட்ச தொகை

இங்கிலாந்தில் கடும் வெப்பத்தால் 5,258 பேர் உயிரிழப்பு! 2016க்குப் பின் பதிவான அதிகபட்ச தொகை

1 minutes read

இங்கிலாந்தில் 2026ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக 5,258 பேர் உயிரிழந்துள்ளனர் என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து வெப்பத்துடன் தொடர்புடைய உயிரிழப்புகளின் அதிகபட்ச எண்ணிக்கையாக இது அமைந்துள்ளது.

2026ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான கோடைக்காலமாக அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு 2,985 வெப்பம் தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.

குறிப்பாக, ஜூன் 21 முதல் 28ஆம் திகதி வரையிலான காலப்பகுதியே இந்த ஆண்டின் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட காலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 2,401 பேர் வெப்பத்துடன் தொடர்புடைய காரணங்களால் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் வெப்பநிலை 38 பாகை செல்சியஸை எட்டியிருந்தது.

2026ஆம் ஆண்டு மே முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 7 வெப்ப அலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. இவை மொத்தமாக 41 நாட்கள் நீடித்ததாக UKHSA தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு போதிய மழைவீழ்ச்சி இல்லாததால் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளிலும் வேல்ஸ் முழுவதிலும் வறட்சி நிலை அறிவிக்கப்பட்டது. சில பகுதிகளில் காட்டுத்தீயும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் கடுமையான வெப்பநிலை நிலவும் காலங்கள் நீண்டதாகவும், அடிக்கடியும் அதிக தீவிரத்துடனும் ஏற்படக்கூடும் என UKHSA எச்சரித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.