செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு: நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேறிகள் சிக்குண்டனர்

நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு: நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேறிகள் சிக்குண்டனர்

1 minutes read

நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நூற்றுக்கும் அதிகமான வெளிநாட்டு மலையேறிகள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியின் வெவ்வேறு இடங்களில் தங்கியிருப்பதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் புத்தி கந்தகி ஆற்றில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு காரணமாக ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டதைத் தொடர்ந்தே இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, அப்பகுதியில் அமைந்திருந்த பிரதான மலையேறும் பாதைகளும் பாலங்களும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த அதிகாரிகள், இதுவரை 12 வெளிநாட்டவர்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த அனர்த்தத்தில் எவரும் உயிரிழந்ததாக இதுவரை தகவல்கள் வெளியாகாத போதிலும், உள்ளூர் கிராமவாசிகள் ஐவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெள்ளப்பெருக்கு காரணமாக பல குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மூன்று நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் நீர்மட்டம் குறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியவர்களை மீட்பதற்கான பணிகள் இராணுவத்தினரால் இன்றும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.