பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் உறவை மீளாய்வு செய்ய முன்வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரமதர் ஆன்டி பர்ன்ஹாம் அழைப்பு விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கு இடையிலான உச்சி மாநாடு நடைபெறவுள்ள பின்னணியில் அவர் இந்த வலியுறுத்தலை மேற்கொண்டுள்ளார்.
பிரஸ்ஸல்ஸுடன் சிறந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பைப் புறக்கணிப்பது தமக்குரிய கடமையிலிருந்து தவறுவதற்குச் சமமான செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் – ஐக்கிய இராச்சிய உச்சி மாநாடானது, பொருளாதார வளர்ச்சி மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் உள்ளிட்ட மிக முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கைகளின் ஊடாக, 2040ஆம் ஆண்டளவில் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை ஆண்டுக்கு 10 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான அளவில் உயர்த்த முடியும் என அரசாங்கத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புவாத நிலைப்பாடான ‘மேட் இன் யூரோப்’ வேலைத்திட்டம் காரணமாக இந்தப் பேச்சுவார்த்தைகளில் சில முட்டுக்கட்டைகள் அல்லது தடைகள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.