செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா டெல்லியில் இந்திய – நேபாள பிரதமர்கள் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை

டெல்லியில் இந்திய – நேபாள பிரதமர்கள் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை

1 minutes read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவும் புதுடெல்லியில் இன்று திங்கட்கிழமை (23) இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகம், முதலீடு, மின்சக்தி, போக்குவரத்து, ரயில் மற்றும் வீதி இணைப்புகள், உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய முக்கிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா நவம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். நேபாளப் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது இந்திய விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதுடன், மின்சக்தித் திட்டங்களும் ஆரம்பித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் நேபாளம் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.