தமிழ் திரையுலகில் நட்சத்திர மதிப்பு கொண்ட நடிகரான அருள்நிதி கதையின் நாயகனாக- கிராமத்து காவல் தெய்வமாக- நடித்திருக்கும் ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் அருள்நிதி, அமீர், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதன் ராவ், ஹரிஷ் பெராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், ‘மைனா’ நந்தினி, அர்ஜெய், ஓ ஏ கே சுந்தர், கவிதா பாரதி, டி.எஸ்.கே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 மைல்ஸ் ஃபர் செகண்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கும் நிலையில். இதன் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கிராமிய காவல் தெய்வத்தின் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களாக இருப்பதால்.. ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது.