1
தினமும்
தன் பூந்தோட்டத்தை
அழகு பார்த்தாள்
என் மனைவி.
ஒவ்வொரு பூக்களாய் கையில்
எடுத்து ரசித்தாள்.
நான்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று
ஆவலாய்
கதவைத் திறந்தாள்.
பூக்களை யாரோ களவாடியிருந்தார்கள்.
அழுதபடி உள்ளே வந்தாள்.
சொன்னாள்..
வாரத்தைகளை விட
அழுகையே அதிகமாய் தெரிந்தது.
அவளின் உழைப்பு,கனவு
எல்லாம் அதுவே.
இன்றிரவு நட்சத்திரங்களை
எண்ணமுடியாதவாறு
அவளின் அழுகை
தலையணை
நனைக்க
என் கனவும்,கவிதையும்
உதிரும்…உஷ்ணப்பூக்களாய்
– முல்லைஅமுதன் –