குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். சீம்பாலில் குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சத்துகள் உள்ளன. இதன் மூலம் பச்சிளம் குழந்தையை நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.குழந்தை பிறந்த 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும். புட்டிப்பால் மற்றும் பால் பவுடர்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இதன் மூலம் வயிற்றுப்போக்கு மற்றும் நுரையீரல் சளி போன்ற கொடிய நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற முடியும். முதல் ஆறு மாதங்கள் கிரேப் வாட்டர் மற்றும் டானிக்குகள் கொடுக்கக்கூடாது. தாய்ப்பால் எளிதில் ஜீரணிக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அதில் போதுமான அளவு உள்ளது.
மகப்பேறு காலத்தில் கர்ப்பினி பெண்கள் அதிக புரதசத்துள்ள முட்டை, பால், பாதாம், பிஸ்தா போன்றவற்றுடன் கடல் மீன்கள் உட்கொண்டால் குழந்தை வளர்ச்சி சிறப்பானதாக அமையும். இரத்த சோகையை தவிர்க்க கீரை, பேரிச்சம்பழம், ஆப்பிள் பழம் போன்றவற்றுடன், இரும்புசத்து மாத்திரைகளை உட்கொள்வது சிறந்தது.கர்ப்பிணி தாயின் உடல்நலன் நன்றாக இருக்கும்பட்சத்தில் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியும் சிறப்பானதாக அமையும்.