செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் துணை அதிபர் பதவி தேர்வு-ஹிலாரி கிளிண்டன்துணை அதிபர் பதவி தேர்வு-ஹிலாரி கிளிண்டன்

துணை அதிபர் பதவி தேர்வு-ஹிலாரி கிளிண்டன்துணை அதிபர் பதவி தேர்வு-ஹிலாரி கிளிண்டன்

1 minutes read

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில், வேட்பாளராக போட்டியிட தயாராகி வரும் ஹிலாரி கிளிண்டன், துணை அதிபர் பதவிக்கு, டிம் கைனேவை, 58,  தேர்வுசெய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவ., 8ல் நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப், அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஜனநாயக கட்சியில், ஹிலாரி கிளிண்டன், உத்தேச வேட்பாளராக உள்ளார். அடுத்த சில நாட்களில் நடக்கவுள்ள, ஜனநாயக கட்சியின் மாநாட்டில், அவர் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என, தெரிகிறது. இந்நிலையில், ”ஜனநாயக கட்சியில், துணை அதிபர் வேட்பாளராக, வெர்ஜினியா மாகாணத்தின் முன்னாள் கவர்னரும், தற்போதைய செனட் சபை எம்.பி.,யுமான டிம் கைனே, களமிறங்குவார்,” என, ஹிலாரி கிளிண்டன் அறிவித்துள்ளார். குடியரசு கட்சியில் துணை அதிபர் பதவிக்கு, இண்டியானா மாகாண கவர்னர், மிக் பென்ஸ் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளிலும், துணை அதிபர் வேட்பாளர்கள் முடிவாகி உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.