செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்ததுசூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்தது

சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்ததுசூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்தது

1 minutes read

ஓர் குழந்தை பசியால் வாடி, இயலாமையுடன் நகர்வது போல, களைத்து ஓய்ந்ததுபோல இருக்கிறது. சற்று நேரத்தில் அந்தக் குழந்தை இறந்ததும் அதனை உணவாக்கிக் கொள்ளக் காத்திருக்கிறது ஓர் பருந்து. மனம் பதைத்துப் போகும் அந்தப் படத்தைப் பார்க்கும் எல்லோருக்கும் அந்தக் குழந்தை பின்பு என்னவானது? என்கிற தவிப்பு உண்டாகியிருக்கும். அதைவிட முக்கியமாக இதனைப் படம்பிடித்தவர் யார் என்ற கேள்வி தோன்றியிருக்கும்.

சூடான் அப்போது வறுமையின் பிடியில் சிக்கி பல்லாயிரக்கணக்கானவர்களை பலி கொடுத்தது. ஐ.நா சபையின் மூலம் நாடு முழுவதும் உணவு பொருட்கள் பரவலாக வழங்கப்படுகிறது. அப்படியான ஒரு பொழுதில் விமானத்தை நோக்கி உணவுக்காக மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். தனித்து விடப்பட்ட அந்தப் பெண்குழந்தையின் பெற்றோர் உணவுக்காக ஓடிச் சென்றிருக்கலாம். குழந்தை தானும் உணவுமுகாம் நோக்கித் தவழ்ந்து செல்கிறது. கெவின் கார்ட்டர் படம்பிடிக்கத் தயாராகிறார்.

அப்போது பருந்து வந்து அவளருகில் அமர்கிறது. கெவின் கார்ட்டர் காத்திருக்கிறார். அந்தப்பருந்து என்ன செய்யப்போகிறது என்பதுபோல. இருபது நிமிடங்கள் காத்திருந்து, பருந்து பறந்து சென்று விடாமல் மெதுவாக முன்னேறிப் படம் பிடித்துவிடுகிறார். பின்னர் பருந்தைத் துரத்திவிட்டு விமானத்துக்குத் திரும்பிவிடுகிறார். குழந்தை? பெற்றோர் வந்து தூக்கிச் சென்றார்களா? எதுவும் அவருக்கும் தெரியவில்லை. அப்போதைய மனநிலையில் அவர் அதை யோசிக்கவோ,கவலைகொள்ளவோ இல்லை.

அந்தப் புகைப்படம் 1994-ஆம் ஆண்டுக்கான ‘புலிட்சார் விருது’ பெற்றது. பாராட்டுகளைப் போலவே கேள்விகளும், கண்டனங்களும் எழுந்தன. குற்றவுணர்ச்சிக்கு உள்ளானார் கார்டர். விருது வாங்கி இரண்டே மாதங்களில், தனது முப்பத்து மூன்றாவது வயதில் தாங்கமுடியாத மன உளைச்சலில், தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.

ஜேர்மன் நாசி இராணுவத்தினர் தற்பெருமை கொண்டு பிடித்த படங்களே, ஹிட்லர் ஆட்சியின் யூதப்படுகொலைச் சாட்சியங்களாகின.

புகைப்படங்கள் காலத்துக்கு நிறம் கொடுக்கின்றன. நாம் வாழாத காலத்தைக் கண்முன் நிறுத்துகின்றன. ஒரு புகைப்படத்தின் அடிப்படையான நிறம் அப்போதிருந்த தொழில்நுட்பத்தை, அந்தக் காலத்தைச் சொல்லிவிடுகிறது. கருப்பு வெள்ளைப் புகைப்படத்துக்குப் பிறகு, வந்த மண்நிறத்தை அடிப்படியாகக் கொண்ட புகைப்படங்கள் ஒரு தனியான உணர்வைக் கொடுக்கும்.

 

 

நன்றி :   நாட்டுப்புற நாதன் | இன்று ஒரு தகவல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.