செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் – தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடைஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் – தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை

ஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் – தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடைஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் – தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை

1 minutes read

 

 

ஐஸ்வர்யாராய் நடித்த படத்தில் பாகிஸ்தான் நடிகர் இடம்பெற்று இருப்பதால், அந்த படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் சங்கம் தடை விதித்து உள்ளது.

 

ஐஸ்வர்யாராய்-ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்துள்ள இந்தி படம் ‘ஏ தில் ஹை முஷ்கில்.’ இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நடித்து இருந்தார். ரன்பீர் கபூருடன் படுக்கை அறை காட்சிகளில் அவர் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஐஸ்வர்யாராய் அரைகுறை ஆடையில் நடித்து இருந்தார்.

அபிஷேக்பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு வந்த படங்களில் இந்த அளவுக்கு அவர் கவர்ச்சியாக நடிக்க சம்மதிக்கவில்லை என்றும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு இப்படி கவர்ச்சியாக நடித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் இந்தி பட உலகினர் முணுமுணுத்தனர். ஐஸ்வர்யாராயே கதைக்கு கவர்ச்சி தேவை என்று சொல்லி இயக்குனரை வற்புறுத்தி இந்த காட்சிகளை படமாக்க வைத்ததாகவும் தகவல் வெளியானது.

அவர் கவர்ச்சியாக நடித்ததால் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் அதிருப்தியில் இருப்பதாகவும் மாமியார் ஜெயாபச்சன் கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. கணவர் அபிஷேக்பச்சனுக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படம் தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஐஸ்வர்யாராயின் படுக்கையறை காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகவும் அந்த காட்சிகள் குழந்தைகள் மனநிலையை பாதிக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். கவர்ச்சி காட்சிகளை அவர்கள் வெட்டி எறிந்து விட்டு படத்துக்கு யுஏ சான்றிதழ் அளித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.