செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இத்தாலியின் வெனிஸ் நகரம் இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரில் மூழ்கி விடும்?இத்தாலியின் வெனிஸ் நகரம் இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரில் மூழ்கி விடும்?

இத்தாலியின் வெனிஸ் நகரம் இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரில் மூழ்கி விடும்?இத்தாலியின் வெனிஸ் நகரம் இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரில் மூழ்கி விடும்?

1 minutes read

இத்தாலியின் வெனிஸ் நகரம் இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரில் முழுவதுமாக மூழ்கி விடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகின் அழகிய நகரம், மிதக்கும் நகரம், தண்ணீர் நகரம், எட்டிரியாட்டிக் இளவரசி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வெனிஸ் நகரம், இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் உள்ளது. வெனிட்டோ என்ற பகுதியின் தலைநகராக வெனிஸ் உள்ளது. நகர் முழுவதும் ஓடும் கால்வாய்களே இதன் முக்கியப் போக்குவரத்து வழியாகத் திகழ்கின்றது. மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள இந்த நகரம் 117 தீவுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தீவையும் இணைக்கக் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெனிஸ் நகரைச் சுற்றித் தற்போது 150 கால்வாய்கள் உள்ளன. நிறைய பாலங்கள் இந்த கால்வாய்களை கடக்க உதவுகின்றன. கொண்டோலா என்ற படகுகள், போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நகரில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கிறார்கள். உலகில் மிக அழகிய நகரங்களில் ஒன்றாகவும், உலகளவில் பெரிய சுற்றுலாத் தலமாகவும் வெனிஸ் நகரம் விளங்கி வருகிறது. இந்த நகரம் ஐ.நா., வின் ‘பாரம்பரிய சின்னங்களின்’ பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
ஆபத்து: பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அழகிய நகரம், அடுத்த 100 ஆண்டுகளுக்குள் முழுவதும் கடல் நீரில் மூழ்கி விடும் என இத்தாலியின் தேசிய புவி இயற்பியல் மற்றும் எரிமலை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் ‘ 2100ம் ஆண்டுக்குள் இங்கு கடல் நீர்மட்டம் 5 அடி உயரும். கடந்த 1000 ஆண்டுகளில் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது’ என எச்சரித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.