மனித செயற்பாடுகளை இலகுவாக்குவதற்கு இயந்திரங்களையும், ரோபோக்களையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எனினும் இவற்றிற்கான கட்டளைகளை வழங்குவதற்கு மனித உழைப்பு அவசியப்படுகின்றது.
ஆனால் எதிர்காலத்தில் அதனையும் குறைப்பதற்கான முயற்சிகள் தற்போதிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மனித மூளையில் உருவாக்கப்படும் அலைகளை உணர்ந்து செயற்படக்கூடிய ரோபோக்களை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இதனால் இருந்த இடத்திலிருந்தே தமது எண்ணங்களால் ரோபோக்களுக்கு மனிதர்கள் கட்டளை இட முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை எம்ஐடி நிறுவனத்தின் கணிப்பொறி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் ஆராய்ச்சியாளர்களே வடிவமைத்துள்ளனர்.
அதிப்பொல் மனிதர் களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’ க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘ரோபோ’ வை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச் சியாளர்கள் உருவாக்கி யுள்ளனர். பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ் நிலையில் தனது சந்தே கங்களை புத்திசாலி தன மான கேள்விகளாக கேட் கும் வகையில் அது வடி வமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படு கிறது. அதன்மூலம் ‘ரோபா’க் களின் செயல்பாடு களின் திறன் மேம்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.