செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்காவில் சாம்சங் ‘ஸ்மார்ட்’ டி.வி. மூலம் வீடுகளில் வேவுஅமெரிக்காவில் சாம்சங் ‘ஸ்மார்ட்’ டி.வி. மூலம் வீடுகளில் வேவு

அமெரிக்காவில் சாம்சங் ‘ஸ்மார்ட்’ டி.வி. மூலம் வீடுகளில் வேவுஅமெரிக்காவில் சாம்சங் ‘ஸ்மார்ட்’ டி.வி. மூலம் வீடுகளில் வேவு

1 minutes read

அமெரிக்காவில் சாம்சங் ‘ஸ்மார்ட்’ டி.வி.க்களில் குறிப்பிட்ட சாப்ட்வேரை இணைத்து, வீடுகளில் நடக்கிற உரையாடலை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஒட்டு கேட்டுள்ளது. இந்த வேவு பார்க்கும் விவகாரத்தை ‘விக்கி லீக்ஸ்’ இணையதளம் அம்பலப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஏராளமான பைல்களை அந்த இணைய தளம் வெளியிட்டுள்ளது.
இந்த ‘ஸ்மார்ட்’ டி.வி.களை பயன்படுத்துகிறவர்கள் சுவிட்சுகளை, ரிமோட்டை பயன்படுத்தாமல் வாய்வழியாக உத்தரவிட்டு இயக்க முடியும். டி.வி.யில் பொருத்தப்பட்டுள்ள மைக்கில் உத்தரவுகள் பதிவாகி செயல்படுத்தப்படுகிறது.
இந்த ‘மைக்’ மூலம் வீட்டில் உள்ளவர்கள் பேசுகிற பேச்சும் பதிவாகி, அதை சி.ஐ.ஏ. ஒட்டு கேட்க முடியும்.
இதே போன்று ஸ்மார்ட் போன் மூலமும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பைல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., மற்றும் வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்து விட்டன.
இந்த பைல்கள் எப்படி விக்கிலீக்சுக்கு கிடைத்தது என்பது அதிகார வர்க்கத்துக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சி.ஐ.ஏ.யும், எப்.பி.ஐ.யும் கூட்டு விசாரணையை தொடங்கி உள்ளன.
இந்த விவகாரம் குறித்து சி.ஐ.ஏ.யின் செய்தி தொடர்பாளர் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில், “பயங்கரவாதிகளிடம் இருந்தும், இதர பகைவர்களிடம் இருந்தும் மக்களை பாதுகாப்பதற்கான உளவு அமைப்புகளின் திறனை விக்கிலீக்ஸ் தகவல்கள் பாதிப்பதாக அமைந்துள்ளது. இது அமெரிக்க மக்களை மன உளைச்சலில் ஆழ்த்துவதாக அமைந்து உள்ளது” என கூறினார்.
மேலும், “இத்தகைய செயல்கள், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை முடக்குவதோடு, நமக்கு நமது பகைவர்கள் தீங்கு விளைவிப்பதற்கு உதவியாக அமைந்து விடும்” என்றும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.