செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை செவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?

செவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?

1 minutes read

நமது சூரியமண்டலத்தில் மனிதன் காலடி பதிக்கக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்று இருக்கிறது என்றால் அது செவ்வாயாகத்தான் இருக்கும். மனிதன் சந்திரனுக்கு போய்விட்டு வந்தாலும் சந்திரன் என்பது கோள் அல்ல. அது பூமியை சுற்றிவரும் ஒரு துணைக்கோள் மட்டுமே. புதன், வெள்ளி (சுக்கிரன்) ஆகியவை மனிதன் போகமுடியாத இடங்கள். சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளதால் புதன் கிரகம் வெப்பம் பூமியில் உள்ளதைபோல 11மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் பகல் என்பது சுமார் 3 மாதத்திற்கு இருக்கும். வெள்ளிக்கு செல்லலாம் என்றால் அது அதைவிட மோசமான பருவநிலையை கொண்டுள்ளது. அங்கு காற்றழுத்தம் மிக அதிகம்.

ஆளில்லாத விண்கலம் வெள்ளியில் போய் இறங்கினாலும் கடும் அழுத்தத்தால் விண்கலம் தூளாக நொறுங்கிவிடும். சரி… வெப்பம், காற்றழுத்தம் குறைவான கிரகத்திற்கு செல்லலாம் என்று செவ்வாய்க்கு அப்பால் உள்ள வியாழன், சனியை ஆராய்ந்தால் அங்கு வேறுமாதிரியான சூழ்நிலை. அதாவது பனிக்கட்டி உருண்டைகளாக அவை இருக்கின்றன. ஆளில்லா விண்கலம் அங்கு போய் இறங்கினால் அவை புதைசேற்றுக்குள் சிக்கியது போல புதைந்து விடும்.
அதனால் தான் சூரியமண்டல கிரகங்களில் செவ்வாய் மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்கிறது. அதனால்தான் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக செவ்வாயை நோக்கி அவ்வப்போது ஆளில்லா விண்கலன்களை அனுப்பி மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

 

நன்றி : தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.