ஜேர்மன் Münster பகுதியில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று BBC ஊடக செய்தி வெளியிட்டுள்ளது.
