செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்த பலர் கைது!

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்த பலர் கைது!

0 minutes read

சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் அசர்பஜானில் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நாட்டின் ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

அசர்பஜானின் எல்லைப் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் குடியேற்ற சேவைகள் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைதாகியுள்ளனர். அவர்கள் அசர்பஜானில் இருந்து ஈரான் – துருக்கி வழியாக, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்துள்ளமை தெளிவாகி இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர், மேலும் சில வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 8ம் திகதியும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர் அசர்பஜானில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சின்னையாப்பிள்ளை டடீஸ், சின்னையாப்பிள்ளை ஜகதீசன் மற்றும் ஜீவதாசன் அசுயூமி ஆகிய மூன்று பேரும் ஒரு குழந்தையும் இவ்வாறு கைது செய்யப்பட்டவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களும் ஐரோப்பிய நாடுகள் நோக்கிய பயணத்தின் போதே கைதாகியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.