செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.

ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.

0 minutes read

சி.வி. விக்கினேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, வடமாகாண அமைச்சர்களுக்கான பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் சி.வி. சிக்கினேஸ்வரன் முன்னிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

முதலமைச்சருக்கான பதவியேற்பு நிகழ்வு அலரிமாளிகையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் வட மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி. விக்கி­னேஸ்­வரன் ஜனா­தி­பதி முன்­னி­லையில் சத்­தி­ய­ப்பி­ர­மாணம் செய்­வது தொடர்பில் இன்று காலை ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ஜனா­தி­ப­தி­யுடன் காலை நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து முற்பகல் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.