0
ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்று வரும் கோடைக்கால 3வது இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது.
குறித்த போட்டியில் பெண்களுக்கான 2000 மீற்றர் தடை தாண்டல் ஒட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா என்ற 16 வயதுச் சிறுமி, மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கு முதல் வெண்கலப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இவர் சிலாபத்தில் ஏழ்மையான மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது.