இன்று 19 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மறுபடியும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 1 மணியளவில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ஆரம்பமான பாராளுமன்றம், மிகக் குறுகிய நேரத்தில் நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.