ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்கப் போவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நான் சபாநாயகருக்கு அழுத்தம் விடுப்பதாக தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார். நான் அறிந்த வகையில் கரு ஜெயசூரியவை அவ்வாறு முடக்க முடியாது. பெரும்பான்மை இல்லாமையினாலேயே அவர்கள் தற்போது இவ்வாறு பேசுகின்றனர்.
நான் மகாநாயக்க தேரர்களை சந்திக்கச் சென்றபோது ஊடகங்களுக்கு ஒரு விடயத்தைக் கூறியிருந்தேன். அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்துவதாகக் கூறியிருந்தேன். அதன் மூலம் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரையே பொது வேட்பாளராகக் களமிறக்குவோம் என்பதைக் கூறியிருந்தேன். என அவர் தெரிவித்துள்ளார்.