
முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமே இதற்க்கு காரணம் .
இந்த சம்பவத்துக்கு காரணம் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்ததே ஆகும் தாக்குதலில் இரு முதலாம் வருட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவது பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர்.இன்று பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முதலாம் ஆண்டு இரு மாணவர்கள், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் சிலமணிநேரம் பதற்ற நிலமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.