செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நேற்றும் இன்றும் குப்பைகள் அகற்றப்படவில்லை;வவுனியாவில் போராட்டம்

நேற்றும் இன்றும் குப்பைகள் அகற்றப்படவில்லை;வவுனியாவில் போராட்டம்

0 minutes read

வவுனியா – புதிய சாலம்பைக்குளம் கிராமத்திற்கு அருகிலுள்ள குப்பை மேட்டினை அகற்றுமாறு கோரி பிரதேச மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

வவுனியா நகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் உள்ள குப்பைகளை சாலம்பைக்குளம் கிராமத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் குப்பை கொட்டப்படும் இடத்திற்கு செல்லும் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் தாம் நோய்வாய்ப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.மேலும், வவுனியாவில் நேற்றும் இன்றும் குப்பைகள் அகற்றப்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நேற்று முதல் குப்பைகளை அகற்றும் பணிகள் ஸ்தம்பித்துள்ளதால், டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக வவுனியா நகர சுகாதார உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.