செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மம்தா பானர்ஜியை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது!

மம்தா பானர்ஜியை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது!

1 minutes read

மம்தா பானர்ஜி அரசை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், அது நடைபெறாத பட்சத்தில் அவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ மம்தா பானர்ஜி அரசை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. ஒருவேளை தோற்கடிக்க முடியாவிட்டால், மம்தா பானர்ஜியை கொலை செய்ய பா.ஜனதா சதித்திட்டம் தீட்டக்கூடும்.

கூலிப்படை மூலம் இதை செய்து விட்டு மற்றவர்கள் மீது பழி போடக்கூடும். கோடிக்கணக்கான மக்களுக்கு தாய் போல் இருக்கும் மம்தா பானர்ஜிக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்க முயன்றால் அதை தடுக்க நாங்கள் இரத்தம் சிந்தத்தயார்.

பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல் வீச பா.ஜனதாவே ஆட்களை ஏற்பாடு செய்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.