செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் உடனடி தேவைக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டது!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் உடனடி தேவைக்குரிய பொருட்கள் வழங்கப்பட்டது!

1 minutes read

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழான தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டு அவர்களுக்கான உடனடி தேவைக்குரிய உணவல்லாத பொருட்களையும் வழங்கியுள்ளார்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர் தொடர்ந்தும் பாய்வதால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றன.

இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை ஐயன்கோவிலடி கிராமம் முழுமையாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 10 வரையான குடும்பங்கள் முரசுமோட்டைஅமைந்துள்ள பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளன.


இவ்வாறு தங்கியுள்ள மக்களை இன்று (15-01-2021)மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கு உடனடி தேவைக்குரிய உணவு அல்லாத பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.


இதில் கண்டாவளை பிரதேச செயலாளர் ட ரீ. பிருந்தாகரன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ் கோகுல்ராஜ் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் கிராம அலுவலர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டிருந்தனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.