இயக்குனரும், நடிகருமான சேரன் ட்ரீம்ஸ் இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்இயக்குனரும், நடிகருமான சேரன் ட்ரீம்ஸ் இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்

ஏற்கெனவே ட்ரீம் தியேட்டர் புரொடக்ஷன் ஹவுஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஆட்டோகிராப், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ஆடும் கூத்து, முரண் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.

தற்போது ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, அப்பாவின் மீசை ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்.

இதில் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

எங்கேயும் எப்போதும் சர்வானந்த்- நித்யா மேனன் நடிப்பில் சேரனே இந்தப் படத்தை இயக்கி உள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 15ம் திகதி நடைபெற உள்ளது.

சேரனே ட்ரீம் சவுண்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் இசையை வெளியிடுகிறார்.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த தயாரிப்பான அப்பாவின் மீசை படத்தின் பாடல்களையும் தன்னுடைய இசை நிறுவனத்தின் மூலம் வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார் சேரன்.

ஆசிரியர்