December 7, 2023 3:42 am

நடிகை ஸ்ரீதேவியின் மகளைத் தேடி வரும் பட வாய்ப்புகள்நடிகை ஸ்ரீதேவியின் மகளைத் தேடி வரும் பட வாய்ப்புகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தென்னிந்தியத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக உயர்ந்து பின்னர் இந்தித் திரையுலகிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் நடிகை ஸ்ரீதேவி.

இந்தித் தயாரிப்பாளாரான போனி கபூரை மணந்து கொண்ட இவருக்கு ‘ஜான்வி’, ‘குஷி’ என்ற இரண்டு பெண்கள் உள்ளனர். 16 வயதில் இருக்கும் பள்ளி மாணவியான ஜான்வி தன் தாயாருடன் பேஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உண்டு.

அப்படி கலந்து கொண்டதில் தென்னகத் தயாரிப்பாளர்களின் கவனம் அவர் மீது திரும்பியுள்ளது. இந்தித் திரைப்படத் திட்டங்களுடன் இருக்கும் தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள், நட்சத்திர நடிகர்களின் வாரிசுகளுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஜான்வியின் தந்தை போனி கபூரை அணுகியுள்ளனர். ஆனால், அவர் சம்மதம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா போன்றவர்களுடன் வாய்ப்புகள் தெரிவிக்கப்பட்டதாகவும் ஆனால் அவரின் இள வயது காரணமாக பெற்றோர்கள் மறுத்துவிட்டனர் என்றும் நடிகையின் வீட்டிலிருந்து தகவல் வெளியானது. அல்லு அர்விந்த், அஸ்வினி தத், தில் ராஜூ போன்ற பெரும் தயாரிப்பாளர்கள் கேட்டதற்கும் தன் மகள் படிப்பில் கவனம் செலுத்துவதையே தான் விரும்புவதாக ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.

மேலும், படிப்பு முடிந்தவுடன் திருமணம் முடித்து இல்லற வாழ்வில் தன மகள் ஈடுபடுவதையே தன் விருப்பமாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

gfr

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்