பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்

2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்.

கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு’. இதில் அகில் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார். இப்படத்திற்கு திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்தா மற்றும் வெண்மணி படங்களை இயக்கியவர். படத்திற்கு ஷாம் டி.ராஜ் இசையமைத்துள்ளார். ஜி.சிவசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சுமார் 2 வருட இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க இருக்கிறார். அவர், படத்தின் கதையைக் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம். இவர்களுடன், நிழல்கள் ரவி, மீனாள், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டதுதான் படத்தின் கதை. ஓகேனக்கல், பாலக்கோடு, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்.

கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு’. இதில் அகில் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார். இப்படத்திற்கு திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்தா மற்றும் வெண்மணி படங்களை இயக்கியவர். படத்திற்கு ஷாம் டி.ராஜ் இசையமைத்துள்ளார். ஜி.சிவசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சுமார் 2 வருட இடைவெளிக்குப் பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா இப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க இருக்கிறார். அவர், படத்தின் கதையைக் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம். இவர்களுடன், நிழல்கள் ரவி, மீனாள், தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மையமாகக் கொண்டதுதான் படத்தின் கதை. ஓகேனக்கல், பாலக்கோடு, ராயக்கோட்டை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

ஆசிரியர்