நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள்நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள்

நயன்தாரா இன்று தனது 29வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

2005ல் வெளியான ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்க நயன்தாரா. தொடர்ந்து ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, உள்ளிட்ட முன்னனி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இடையில் சொந்தப் பிரச்சனைகள் காரணமாக சில காலம் தமிழ்சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் நயன்தாரா தற்போது மீண்டும் தமிழில் பிஸியாக நடித்து வருகிறார். வெற்றிகரமாக இரண்டாவது ரவுண்டு துவங்கியுள்ள அவருக்கு இந்த வருடம் சிறப்பாக அமைந்துள்ளது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.

ஆசிரியர்