டிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடுடிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடு

வரும் பொங்கல் தமிழக ரசிகர்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக இருக்கப் போகிறது. காரணம், அன்றைய தினத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளன. ஜனவரியில் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாக இருப்பதால் அதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. எனவே, பொங்கலுக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் விவரம் வருமாறு:-

டிசம்பர் 12 – கோச்சடையான்

ரஜினி, தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். முற்றிலும் அனிமேஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.

டிசம்பர் 15 – ஜில்லா

துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய், காஜல் அகர்வால் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் ஜில்லா. நேசன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய்யும், இமானும தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இமான் இசையமைக்கும் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிசம்பர் 18 – வீரம்

அஜீத், தமன்னா முதன்முறையாக இணைந்திருக்கும் படம் வீரம். சிறுத்தை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். எனவே, படத்தில் மெலடி மற்றும் குத்து பாடலை எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 26 – விஸ்வரூபம் 2

‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. கமல், தயாரித்து, இயக்கி, நடித்து வரும் இப்படத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடிக்கின்றனர். ஷங்கர் எஹ்சான் லாய் இசையமைத்துள்ளார். இவர்தான் விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளரும் கூட.

 

ஆசிரியர்