பரோட்டா சூரி நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்தை சம்பளமாக பெறுகிறார்.
சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் வரும் பரோட்டா காமெடியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த காமெடியின் மூலம் பிரபலமாகி, பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் ‘பரோட்டா’ சூரி.
‘வேலாயுதம்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். இப்போது ஜில்லா படத்திலும நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், படம் முழுவதும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். இதனால், இப்போது, பரோட்டா சூரியின், கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது.
இதைப் பயன்படுத்தி, தன் சம்பளத்தையும், அதிரடியாக உயர்த்தி விட்டாராம், அவர். முதலில், ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொண்டிருந்த அவர், இப்போது, தயாரிப்பாளர்களிடம், மூன்று விரல்களை நீட்டுகிறாராம்.