ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் மே 9 ம்தேதி திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இந்திய அளவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான முதல் படம் மட்டுமின்றி, ரஜினியின் நடிப்பில் சிறிய இடைவேளைக்குப்பிறகு வெளியாகும் படம் என்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
அதோடு, 125 கோடி பட்ஜெட்டில் 9 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தை உலகமெங்கிலும் வெளியிடுகிறார்கள். அதனால் முக்கியத்துவம் வாய்ந்த தியேட்டர்களை கைப்பற்றும் பணி தீவிரமடைந்திருக்கிறது.
இதுவரை கிடைத்த தகவல்படிஇ கோச்சடையானுக்காக 3850 தியேட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாம். இந்த எண்ணிக்கை ஜாக்கிசான் நடிக்கும் படங்கள் வெளியாகும் தியேட்டர்களை விட அதிகமாம். அதனால் இப்படம் உலக அளவிலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தால் அடுத்து ரஜினியும், ஜாக்கிசான் போன்று ஒரு உலக நடிகராகி விடுவார் என்கிறார்கள்.
முன்னதாக இப்படத்தை உலகம் முழுக்க சுமார் 6 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.