Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய அதே நாளில் சர்கார் படத்தின் டீசர் – வியப்பில் ரசிகர்கள்!

கத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகிய அதே நாளில் சர்கார் படத்தின் டீசர் – வியப்பில் ரசிகர்கள்!

1 minutes read

நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு படம் வெளியாகிறது. மேலும் இந்தப் படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் திடடமிட்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் அக்டோபர் 19ம் தேதி வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கத்தி படத்திற்கும், சர்கார் படத்திற்கும் அபூர்வ ஒற்றுமை இருப்பது தெரியவந்துள்ளது. இதே கூட்டணியில் உருவான கத்தி படத்தின் ட்ரெய்லர் இதே அக்டோபர் மாதம் 19ம் தேதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2014 ம் ஆண்டு வெளியானது. 4 வருடங்கள் கழித்து மீண்டும் அதே தேதியில் விஜய் படத்தின் டீசர் வெளியாவது தாற்செயலாக நடந்த ஆச்சரியமா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More