செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை சாதானாவிற்கு இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது.

நடிகை சாதானாவிற்கு இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருது.

0 minutes read

 

ராம் இயக்கத்தில் தங்க மீன்கள் படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில், சுட்டித் தனம் நிறைந்த பள்ளிக் குழந்தையாக சாதனா அறிமுகமானர். சாதனாவின் சுட்டித் தனம் நிறைந்த நடிப்பு தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் மறைந்த கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாள் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

செல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாதனாவின் நடிப்பு இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இவர் மீண்டும் ராம் இயக்கத்தில் உருவாகிய பேரன்பு படத்திலும் நடித்திருக்கிறார். இப்படம் பல்வேறு விருதுகளுக்கு தெரிவாகியுள்ளது.

இந்நிலையில் சாதனா, சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான டயானா விருதை வென்றிருக்கிறார். இதனை இயக்குனர் ராம் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.